நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம்??

நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.


இலங்கையை சேர்ந்த லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார் அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் அவர் தற்போது "பிரண்ட்ஷிப்" என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் நடிகை லொஸ்லியாவுக்கும் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள லொஸ்லியா, "இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்திதான்" எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.