தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறவோ அல்லது உட்பிரவேசிக்கவோ தடை !

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து யாரும் வெளியேரவோ அல்லது உட்பிரவேசிக்கவோ முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்த பிரதேசத்தில் உள்ள தொழில் மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடுவோருக்கும் இங்கிருந்து வெளியேறுவதற்கு முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

விசேடமாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளமைக்கு அமைவாக இவை தனிமைப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசங்களாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் நிறுத்தபடாமல் செலுத்தப்பட வேண்டும்.இதற்கமைவாக இந்தப் பிரதேசங்களில் பயணிகளை இறக்குதல் அல்லது அழைத்துச் செல்லல் முதலானவற்றையும் மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.