ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பான புதிய வேலைத்திட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான அனுமதி பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் ஊடாக அனுப்புவதன் மூலம் இதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். secratery@mws.gov.lk என்பது மின்னஞ்சல் முகவரி ஆகும்.ஏற்றுமதி அபிவிருத்திச் சபைகள் இலங்கை முதலீட்டுச் சபை என்பவற்றின் அங்கீகாரம் பெற்று ஏற்றுமதி மற்றும் கடல் தொழில் உற்பத்திகளை முன்னெடுத்துச் செல்வது இதன் நோக்கமாகும்.

இதேபோல வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.