பொகவந்தலாவை பகுதியில் தொற்றுக்குள்ளான மூவரும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் பொகவந்தலாவை பகுதியில் தொற்றுக்குள்ளான தந்தை மாத்தறை கம்புறுபிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும்,தாய் மற்றும்  பத்து வயது மகள் ஹம்பாந்தோட்டை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.பொகவந்தலாவை கொட்டியாகலை மத்திய தோட்டத்தில் தாய்,தந்தை,மகள் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது பொகவந்தலாவை கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று நேற்றையதினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொழும்பு பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று பார ஊர்தி ஒன்றில் மீன் ஏற்றி வந்த நபருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த குடும்பத்தில் எஞ்சியிருந்த பத்து பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் தந்தை,தாய்,மகள் ஆகிய மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,அவர்கள் முறையே 47,42,10 ஆகிய வயதுகளை கொண்டவர்கள் எனவும் இதேவேளை தொற்று உறுதியான 42 வயது தாய் நகரப்பகுதியில் உள்ள மூன்று வங்கிகளுக்கு உணவு சமைத்து வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.