மஹர சிறைச்சாலையில் பதற்றம்!ஒருவர் பலி-விசேட அதிரடிப்படை குவிப்பு.

மஹர சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இரண்டு கைதிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய. தெரிவித்துள்ளார்.