இலங்கையில் முதன் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு முக கவசத்தை ஆராய்ச்சிக் குழு தயாரித்துள்ளது..

இலங்கையில் முதன் முறையாக என்டி-வைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களாலான முக கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் குழு தயாரித்துள்ளது.


பொதுவாக முக கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முக கவசத்தில் மூன்று வடிப்பான்கள் உள்ளது. குறித்த முக கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம்.மற்றும் ஒரு மாதத்திற்கு கழுவாமல் பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு குறித்த முகக்கவசம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.