தரம் 3 முதல் 13 வரையில் பாடசாலை மாணவர்களுக்காக சிங்கள தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் ஊடாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி உதவியுடன் இவ்வாறு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளை சரியான முறையில் ஆரம்பிப்பது தற்போது முடியாத காரியம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.