ஹட்டனில் இன்னுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹட்டன் பகுதியில் இன்னுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 தும்புறுகிரிய பிரதேசம் முதல் தொற்றாளரிடம் தொடர்பை பேணியவர்களில் 11 பேருக்கு ஆரம்பத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த 11 பேருடன் தொடர்பை பேணியவர்கள் என்று சந்தேகிக்கப்படும்  ஒருவருக்கே இப்போது தொற்று உறுதியாகியுள்ளது. 


 மேலும் குறித்த தொற்றாளரின் உறவினர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை ஹட்டனில் இடம்பெற்ற மரணச்சடங்கில் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.