அனைத்து திரையரங்குகளும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக மூடப்படும் என்று இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமையவே இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையில் அனைத்து திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.