கொரோனாவால் 20ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 54 வயதுடைய கொழும்பு 12 பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.