Friday, October 30, 2020

ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா- திணறும் அமெரிக்கா

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.அதன் தாக்கம் அமெரிக்காவில் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது.


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதனடிப்படையில் முதன் முறையாக நேற்று ஒரே நாளில் 1,01,461 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா இருந்து வருகிறது. தற்போது அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 985 பேர் உயிரிழந்த நிலையில்,அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 35ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவிருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது.தற்போது 30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 வரும் செவ்வாய்க்கிழமை அங்கு ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியிருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்கு தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்துவிடவேண்டும் என்ற ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!