Tuesday, October 13, 2020

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று; இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலின் காரணமாக மாணவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியதனால் இப்பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை தன்மை இல்லை என அறிய முடிகின்றது.



மேலும் காய்ச்சலின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் முடிவுகள் கிடைக்கும் வரை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இம்மாணவர்களுக்கு கொரோனா தொற்று இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் பல்கலைக்கழகம் கொரோனாவினால் மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என அறியமுடிகின்றது.

மேலும் இந்த பிசிஆர் முடிவுகள் வந்ததன் பிறகு பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதா அல்லது அதனை தற்காலிகமாக மூடி வைப்பதா என்பது பற்றி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிக்கும் எனவும் அறியமுடிகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!