Tuesday, October 13, 2020

நாட்டில் தற்போது காணப்படும் வைரஸ் வேகமாக பரவக்கூடியது -சுகாதார அமைச்சு

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ஏனையவர்களுக்கு இலகுவில் தொற்றக்கூடிய தன்மை கொண்டது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜெயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.


நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய வைரஸினை ஆராய்ந்துள்ள விசேட நிபுணர்கள் இந்த வைரஸ் மிக அதிக அளவான பரவும் தன்மை கொண்டது என எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்களை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!