Monday, October 5, 2020

புங்குடுதீவில் பெண் பயணித்த பஸ் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணம் தொடர்பான விபரங்களை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு ரன்சிலு (WP ND 6503) என்ற பேருந்தில் பயணித்த அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து இலக்கமுடைய மத்த (NP ND 8790) என்ற பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு புங்குடுதீவை காலை 7 மணிக்கு சென்றடைந்து உள்ளார்.

இந்தப் பெண் பயணம் செய்து பேருந்தில் பயணம் செய்தவர்கள் சமூக அக்கறை கொண்டு வடமாகாண சுகாதார திணைக்களத்தின் உடன் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!