Tuesday, October 13, 2020

பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா

சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கட்டுநாயக்க,ரத்தொலுகம மற்றும் ஆடியம்பலம ஆகிய பிரதேசங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பரிசோதகர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

அவர்களில் அனேகமானோர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை சேர்ந்த ஊழியர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் ஆவார்கள்.

தொற்றாளர்களாக  இனங்காணப்பட்ட சுதந்திர வர்த்தக வலையத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 39 ஆகும்.

சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 ஆம் திகதி புதிதாக இனங்காணப்பட்ட தொழிலாளர்களுக்கு இடையில் 
ஆடியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நெருங்கி பழகியவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!