இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனத்தின் கந்தான கிளையின் 12 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜா-எல பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கம்பஹா மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் குறித்த அலுவலகத்தின் பணியாளர் ஒருவரின் மகள் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்டதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.
மின்சார சபையில் பணிபுரிந்த ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.