Tuesday, October 13, 2020

நாட்டின் நன்மைக்காக எத்தனை பேரையும் தனிமைப்படுத்த தயார்

நாட்டில் 2000 பேரை தனிமைப்படுத்த கூடிய மையங்களை அமைத்து வருவதாக இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


ரிவி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 360 விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே இராணுவத்தளபதி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.

அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் போதுமானதாக இல்லை எனவும் தற்போது சுமார் 10,500 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் 2000 பேரை தனிமைப்படுத்த கூடிய மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.நாட்டில் தற்போதைய நிலையில் 96 வயதிற்குட்பட்ட 10,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாம் இதுவரை 51,000 இற்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சமூகத்துடன் இணைத்துள்ளோம்.

 எனவே முடியாதது என்று எதுவும் இல்லை நாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் ராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார். இதேவேளை மினுவாங்கொட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் யார் என்பது குறித்தும் இராணுவத்தளபதி தெளிவுபடுத்தினார்.

அந்தப்பெண் நோய்வாய்ப்படுவதற்கும் முன்னர் அவருக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. அவரை பின்தொடர்ந்த போது
 சுமார் 33 பேர் கொண்ட குழு அதே நோய் அறிகுறிகளைக் கொண்டு உள்ளமை உறுதியானது. இவ்வாறு தேடி வருகின்றோம்.இப்படி இருக்கையில் இதுதான் ஆரம்பப்புள்ளி என எவ்வித நம்பிக்கையும் இன்றி சொல்வதில் ஞாயமில்லை.

புலனாய்வு பிரிவு உட்பட அனைத்து இராணுவமும் சுகாதார பாதுகாப்பிற்காக செயற்பட்டு வந்தாலும் அதனால் எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படவில்லை எனவும் இராணுவத் தளபதி கூறினார். அனைத்து அதிகாரிகளும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!