Tuesday, October 13, 2020

ஒரே நேரத்தில் இரண்டு காதலர்களும் சந்தித்ததால் யுவதிக்கு நேர்ந்த அவலம்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவரின் இரு காதலர்கள் ஒரே நேரத்தில் உறுதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது யால் புறநகரில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த இன்னுமொரு உயர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

சில காலமாக இந்த காதல் தொடர்பு இருந்து வந்த நிலையில், யவதியுடன் கூட படிக்கும் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞருடன் காதல் தொடர்பை அண்மைகாலமாக பேணி வந்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு காதலர்களை எப்படியோ சமாளித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் தனது காதலியுடன் புதிய காதலன் புறநகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தித்துக்கொள்ளும் தகவல் அறிந்த பழைய காதலன் தனது நண்பர்கள் இருவருடன் அங்கு சென்றுள்ளார்.

புதிய காதலனுடன் உணவருந்திக் கொண்டிருந்த காதலியை கண்டதும் ஆத்திரமடைந்த காதலன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.அத்துடன் புதிய காதலன் மீதும் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

உணவக பணியாளர்கள் மற்றும் உணவருந்த வந்த சிலர் ஒன்று சேர்ந்து பழைய காதலனையும் அவனது நண்பர்களையும் பிடித்து வெளியேறியுள்ளனர்.இந்த ரகளையில் உணவகத்தில் உள்ள சில பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. அவற்றிற்கான பணத்தை யுவதியும் புதிய காதலனும் செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!