இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கிடையில் மூன்று வைத்தியர்கள் உள்ளடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கேகாலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தெரன அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1307ஆக அதிகரித்துள்ளதாகவும்,அவர்களில் 1036 பேர் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு தினங்களில் மாத்திரம் 24,878 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும். அதன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள சில பிரிவுகளில் நாளை அல்லது நாளை மறுதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.