Monday, October 12, 2020

தோனியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை அணியின் தொடர் தோல்விகளால் தோனியின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் தோனியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


ஐபிஎல் டி20 தொடர் வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் மிக மிக மோசமாக விளையாடி வருகின்றது.

பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மிக மோசமாக செயல்பட்டு வருகிறது.மிக எளிய இலக்கை கூட எட்ட முடியாமல் சென்னை அணி தோல்விகளை சந்தித்து வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் இரண்டு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து போட்டிகளிலும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

சென்னை அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆரோக்கியமான விமர்சனங்களும் விவாதங்களும் சரிதான் என்றாலும் ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரம்பு மீறி செயல்பட்டு வருகின்றனர்.ஒரு சில முட்டாள்தனமான ரசிகர்கள் தோனி மீதான தங்களது வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் தோனியின் குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அதிலும் சிலர் தோனியின் ஐந்து வயது மகளுக்கு ஒரு முட்டாள்தனமான கற்பழிப்பு மிரட்டலும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!