Friday, October 9, 2020

டிக்கோயா பிரதேசத்தில் 65 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் டிக்கோய ஹோன்சி தோட்ட பகுதிக்கு வந்துள்ளமையால் குறித்த பெண்ணுக்கு தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பெண்ணின் கணவர்,தாய்,இரண்டு பிள்ளைகள் என மொத்தம் ஐந்து பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்காக ரந்தெம்பகுதிக்கு இராணுவத்தினரால் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த தோட்ட பகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

குறித்த பெண் மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து 8.10.2020 வியாழக்கிழமை விடியற்காலை பேருந்தின் ஊடாக ஹட்டனுக்கு வந்து ஹட்டனில் இருந்து இப்பகுதிக்கு வேன் ஒன்றில் வந்ததாக பொது சுகாதார பரிசோதகர்களின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 குடும்பங்களை சேர்ந்த 25 பேருக்கான நிவாரணங்களை வழங்க தோட்ட நிர்வாகம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!