எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் கலந்துகொள்ள உள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரிட்சை இறக்கத்தை சீருடையில் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பயிற்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.இம்முறை பரீட்சை முதல் முறையாக பரீட்சை அனுமதி வழங்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். அழைத்துவரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்தில் பிரவேசிக்க முடியாது. இடைவேளை நேரத்தில் அவர்களின் பெற்றோர்கள் பரீட்சை மத்திய நிலைய வளாகத்தில் பிரவேசிக்க முடியாது.இது தொடர்பான விபரங்களை 1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
இதேவேளை இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றுவதற்கான ஆலோசனையும் வழங்கியுள்ளது. இந்த பரீட்சை ஆரம்பமாகவுள்ள தினத்தன்று காலை 7.30 மணி அளவில் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை 12 திகதி காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது டன் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முடிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.