Tuesday, October 13, 2020

ருகுணு பல்கலைக்கழக மாணவி ஒருவரின் தந்தைக்கு கொரோனா தொற்று

மாத்தறை வெல்லமடம பகுதியில் உள்ள ஒரு ருகுணுபல்கலைக்கழக மாணவி ஒருவரின் தந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த மாணவி மற்றும் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றுமொரு மாணவி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி குறித்த தந்தை மாணவியை பார்ப்பதற்காக விடுதிக்கு வருகை தந்ததாகவும் அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர் ருகுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட முதலாம் ஆண்டு மாணவி ஒருவரின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு மாணவி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளான மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவரே இவ்வாறு  தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!