Wednesday, October 7, 2020

மேலும் 190 பேருக்கு கொரோனா

திவுலுபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

தொற்றுக்கொள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 190 பேரே இவ்வாறு கொரோனா  தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரையிலும் தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பு இருந்து 1020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரானோ தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரின் மகள் உட்பட மொத்தமாக 1022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!