கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வரும் மாணவர்கள் 16 பேர் மட்டக்களப்பிலுள்ள பல்கலைக்கழக விடுதியில் இன்று திங்கட்கிழமை மாலை சுய தனிமைப்படுத்த பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தி உள்ளதாகவும் மக்கள் இது தொடர்பான பீதியடைய வேண்டாம் என்றும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.Monday, October 5, 2020
