Tuesday, October 13, 2020

அரசின் அறிவித்தலை மீறி இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள்

நாடு முழுவதும் கொரோனா தொற்று தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வறிவித்தலை மீறி வவுனியாவில் இயங்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

வவுனியா பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் உத்தரவிற்கமைய நேற்று(13) மாலை வவுனியா புளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை பார்வையிட்ட பொலிசார் அரச அதிபரின் உத்தரவை மீறி இயங்கிய 3 கல்வி நிலையங்களை மூடுமாறு பணித்ததுடன் அனுமதி பெறாது திறக்கப்பட்டமை குறித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!