இலங்கையில் அசுரவேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

 நாட்டில் கொரோனா  தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி இன்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 457 ஆக பதிவாகியுள்ளது.

 

 மேலும் அதில் 8 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு பேலியகொட மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 156 பேருக்கும் கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.