Friday, October 23, 2020

மீன் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

 பேலியகொடை மீன் சந்தையில் மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்த ஹட்டன் மற்றும் தலவாக்கலை நகர மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


பேலியகொடை மீன் சந்தையில் மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்ததாக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்களே ஹட்டன் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையினால் இன்று(23) இவ்வாறு மூடப்பட்டுள்ளது.


 மேலும் பேலியகொடை மீன் சந்தையில் வேலை செய்த டிக்கோயா,தரவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் .டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினர் டிக்கோயா, தரவளை வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!