Friday, October 23, 2020

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் நடத்த நடவடிக்கை.

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை விரைவில்  ஒன்லைன் மூலம் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.


இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

 தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!