டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

ஓட்டமாவடி சுகாதார வைத்திய பிரிவில் உள்ள பெண்ணொருவர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு (26 )நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். என ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி ஜும்மா பள்ளிவாசல் வீதி மூன்றாம் குறுக்கிக் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயாரான 43 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு பரவும் வகையில் நீர்த்தாங்கி வடிகால்களை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இதற்குப் பிறகு இவ்வாறு சுத்தமில்லாமல் இருந்தால் நீதிமன்றத்தால் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.