Tuesday, October 20, 2020

உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்.

 


நாடு முழுவதிலும் தற்பொழுது நடைபெறும் உயர்தரப்பரீட்சை எதிர்கொள்ளும் மாணவர்களை covid-19 வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 2648 ஆகும்.அத்தோடு இவ்வாறு பரீட்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா ரூபா 15 ஆயிரம் வீதம் இந்த நிதியுதவி வழங்கப்படும்.

இந்த நிதியுதவியை இன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணக்கில் வைப்பீடு செய்யுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் வழிநடத்தலில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கல்வி அமைச்சின் சுகாதார அழகினால் வழங்கப்படும் இந்த நிதி தற்பொழுது சம்பந்தப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பணியாளர் சபையின் சுகாதார பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள முக கவசம் பாதுகாப்பான ஆடை அணிகலன்கள் மற்றும் கிருமிநாசினி சவர்க்காரம் வழங்குதல் போன்ற சுகாதார வசதிகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாடு முழுவதிலும் பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தரப் பரீட்சை தற்பொழுது எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதி செய்வதாகவும் அனைத்து பரீட்சார்த்திகள் போன்று சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு ஆகக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!