ஹோமாகம- கஹத்துடுவ பிரதேசத்திலுள்ள ஹைட்ராமனி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தாதியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த தாதி இந்த மாதம் 3ஆம் திகதி மினுவாங்கொட பிரசேத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 200 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.