Sunday, October 18, 2020

மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 3 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஒவிட்டிகல, பதுகம, புதிய பதுகம ஆகிய 3 கிராமங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்துகம சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, மத்துகம சுகாதார பிரிவு மருத்துவஅதிகாரி பி.டி.லயனல் தெரிவித்துள்ளார்.

இதில் அதிகமானோர் அகலவத்த மற்றும் வலலாவிட்ட பிரதேசங்களில் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.

அத்துடன் ஒவிட்டிகல பிரதேச விகாரையிலுள்ள 5 பிக்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த பிக்குகள் அண்மையில் அநுராதபுரத்துக்கு யாத்திரை சென்றிருந்ததாகவும், இவர்கள் பயணித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கும் சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்துகம சுகாதார பிரிவு மருத்துவஅதிகாரி பி.டி.லயனல் தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!