மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) முதல் மீண்டும் வழமை போல் இடம்பெறவுள்ளன.
கொவிட் தொற்று பரவலைத் தொடர்ந்து, கடந்த 07ஆம் திகதி (07.10.2020) முதல் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர மற்றும் கம்பஹாவிலுள்ள திணைக்கள கிளைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.