Thursday, October 22, 2020

வரலாற்றில் முக்கியமானதொரு தவறை செய்யப் போகின்றீர்கள்..இலங்கை வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள்- கரு ஜெயசூரிய

இலங்கை வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்படவேண்டும் என்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்து இருக்கிறது.

 இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ள முன்னாள் சபாநாயகர் இலங்கை வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது.1933ஆம் ஆண்டு ஜெர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது.அவ்வாறான ஒரு தவறை எமது நாடாளுமன்றம் செய்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!