Friday, October 16, 2020

நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம்.

நாட்டில் எந்த பகுதியிலாவது கொரோனா தொற்று ஆபத்து இருந்தால் அந்தப் பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தவிர்க்கமுடியாமல் இதுபோன்ற சட்டத்தினை அமுல் செய்யும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படும்.ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது.

நேற்று வியாழக்கிழமை 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்தும் 46 பேர் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பை பேணி அவர்களும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் மினுவாங்கொடை,கம்பஹா மற்றும் கட்டுநாயக்க பகுதிகளை சேர்ந்தவர்கள்.

அவர்களில் இருவர் மட்டுமே கொழும்பில் வசிப்பவர்கள் வத்தளை மற்றும் கந்தான பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!