Friday, October 16, 2020

போருக்கு தயாராகுங்கள் -சீன ஜனாதிபதி

போருக்கு தயாராகுங்கள் என தமது நாட்டு ராணுவத்தினரிடம் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதை சீன ஊடகம் ஒன்று உறுதிபடுத்தியுள்ளது.


சாஜோ நகரில் ராணுவ கடல் பிரிவு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்ட ஜஸி ஜின்பிங் எல்லையில் மிகவும் விழிப்புணர்வுடன் இருங்கள் முழு விசுவாசம் அர்ப்பணிப்பு நம்பிக்கையுடன் இருங்கள். அவைதான் நாட்டுக்குத் தேவை என்று வீரர்களிடையே உரையாற்றியதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹூவா உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் சீன ஜனாதிபதியின் அழைப்பு இந்தியாவை மையப்படுத்தியதா அல்லது அமெரிக்கா அல்லது ஜப்பானுடனா என்பது தெளிவற்று உள்ளது.தாய்வான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா ஏற்க மறுத்தது கொரோனா வைரஸ் தொற்றுக்கு சீனாவே முக்கிய காரணம் என ட்ரம்ப் குற்றம் சாட்டுவது ஆகிய அனைத்தும் சீனாவை ஆத்திரமூட்டி வருகின்றன.

இந்நிலையில் தாய்வானின் பிராந்திய பாதுகாப்புக்காக அதிநவீனத்துவம் வாய்ந்த ஆயுத தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதிக தூரம் சென்று தாக்கும் ரொக்கெட் ஏவும் அமைப்பு அதில் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சீன ஜனாதிபதியின் இந்த அழைப்பு அமெரிக்கா,தாய்வான்,இந்தியா ஆகிய நாடுகளை விழிப்படைய செய்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!