தற்போது கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வருவதால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தொடர்பாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கா.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்ற நிலையில் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது .இதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாகவே வெட்டுப்புள்ளிகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.