கொழும்பில் கொரோனா ஆபத்து அதிகம் - தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை...

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.


இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு அதிகம் ஆபத்தான பகுதிகளின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவு இவ்விடயம் தொடர்பாக கூறியுள்ளதாவது '27 பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவு ஆபத்தானவையாக காணப்படுகின்றன'. 

இதில் கொழும்பில் 7 சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளும்,கம்பஹாவில் 19 சுகாதார பரிசோதகர் பிரிவுகளும்,களுத்துறையில் இரண்டு சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் ஆபத்தானவையாகும். அதாவது கொழும்பு மாநகர சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதிகளும் மொரட்டுவை பத்தரமுல்லை உட்பட பல பகுதிகள் மிகவும் ஆபத்தானவையாக காணப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது.