தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் நிறைவு பெற்றதும் நாடு பூராகவும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு அடுத்த மாதம் 9ஆம் திகதியிலிருந்து அனைத்து தனியார் பஸ்களும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .கொரோனா தொற்றால் தனியார் பஸ் துறையை சேர்ந்தவர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனைகளுக்கு எந்த ஒரு அதிகாரியாலும் தீர்வு கிடைக்காமையால் இந்த முடிவுக்கு வந்ததாக தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.