Thursday, October 15, 2020

கொரோனா தொற்றாளர் பயணித்த 6 பேருந்துகள் தொடர்பான விவரங்கள்.

கொரோனா தொற்றாளர் பயணித்த 6 பேருந்துகள் இதுவரையில் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ND 4890 கொழும்பு-மெதகம பேருந்து,ND 2350 மாகும்புர-காலி பேருந்து,ND 6503 கொழும்பு-யாழ்ப்பாணம் பேருந்து, ND 9788 எல்பிட்டிய-கொழும்பு பேருந்து மற்றும்  NF 7515 காலி-கடவத்த பேருந்து போன்றவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதி சொகுசு பேருந்துகளில் பயணிகளை ஏற்றும் போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!