பிசிஆர் பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகின்றது...


மெல்லிய துரும்பு போன்ற குச்சி ஒன்றின் நுனியில் பஞ்சு உருளை வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஒன்றினால் உங்களது தொண்டையிலும் மூக்கு துவாரத்திலும் இரண்டு குச்சிகளை தொட்டு எடுப்பது மாத்திரமே.இது உங்களுக்கு எந்த வழியையும் தராது இவ்வாறு மிகவும் சுலபமான முறையில் எடுக்கப்பட்ட மாதிரியை கண்ணாடிக் குழாயில் இட்டு ஐஸ்கட்டிகள் இடப்பட்டு குளிரான முறையில் அனுப்பி வைக்கப்பட்டு polymerase chain reaction (PCR) தொழில்நுட்பம் மூலம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படுகின்றது.இப் பரிசோதனைக்காக யாரும் பயப்பட தேவையில்லை.முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளையும் ஆபத்துகளையும் இதனால் தவிர்க்க முடியும். எனவே பரிசோதனைக்கு முன்வருவோம். கொரோனா வைரஸ் பரவலை தடுப்போம்.