திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் இருந்த அலுவலக சபை உறுப்பினர்கள் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த கப்பலில் இருந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கப்பலில் உள்ள அனைத்து அலுவலக சபையினருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட போது 17 பேருக்கு கொரோனா தொடற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
4000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய இந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு செல்வதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்ததாகவும் வைத்தியர் சுத்தம் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை அந்தக் கப்பலையும் அதில் உள்ள பணியாளர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.