Wednesday, September 30, 2020

லங்கா பிரிமியர் லீக் ஆரம்பிக்கும் திகதி ஒத்திவைப்பு

இலங்கை அரசாங்கத்தின் தனிமைப்படுத்தலுக்கு தேவையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு வீரர்கள் போதுமான காலத்தைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான லங்கா பிரிமியர் லீக் ஆரம்பிக்கும் திகதியை அடுத்த மாதம் 14 ஆம் திகதியிலிருந்து 21ம் திகதியாக இலங்கை கிரிக்கெட் சபை மாற்றியுள்ளது.


தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியாவின் உள்ளூர் 20க்கு 20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வீரர்கள் இலங்கை பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பை குறித்த திகதி மாற்றமானது வழங்கியுள்ளது.

இதேவேளை இன்று நடைபெறவிருந்த வீரர்கள் தெரிவானது இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!