Tuesday, September 29, 2020

தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் லயன்களை அண்மித்ததாக நிர்மாணிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் வலியுறுத்தல்.

தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 669 ஆகும்.உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் போது ஏற்படும் நடைமுறை பிரச்சினைகள் நிர்மாணப்பணிகள் தாமதம் அடைவதற்கு காரணமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட மக்கள் வாழும் லயன்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே லயன்களுக்கு அண்மித்ததாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் இத்திட்டத்தின் நன்மைகளை விரைவாக மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என ஜனாதிபதியும் பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளனர்..

தோட்ட மக்கள் வாழும் சூழலில் இருந்தே அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் வீடமைப்பு திட்டங்களை அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதன் மூலம் நிர்மாணப் பணிகளின் தரத்தை சிறப்பாகப் பேண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!