Tuesday, September 29, 2020

தல அஜித்தின் பரிந்துரையில் 'வலிமை' திரைப்படத்தின் திரைக்கதை மாற்றம்.

தல அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் ஒரு ஜனரஞ்சகமான மசாலா திரைப்படம் என்றாலும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் காட்சிகள் பெரும்பாலானோரை கவர்ந்தது.


இதனால்தான் அந்த திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் வந்து பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த திரைப்படத்திலும் சில சென்டிமெண்ட் காட்சிகள் குறிப்பாக பெண்களை கவரும் வகையிலான காட்சிகள் இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு அஜித் பரிந்துரை செய்ததாகவும் அதன் அடிப்படையில் தற்போது கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யுவன் சங்கர்ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார்.பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா வில்லனாக நடித்து வருகிறார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!