Wednesday, September 30, 2020

சர்வதேச சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க தீர்மானம்

திருநெல்வேலி திரும்ப தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க உள்ளதாக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று(30) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியான தமது போராட்டங்களுக்கு அரசாங்கத்தால் பல்வேறு அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் விதிக்கப்படுவது போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாக அங்குள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டங்களை இடை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

இதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயத்தில் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ள அதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பினர் இன்று(30) தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் உறவுகளுக்கான நீதி வேண்டி நாளை(01) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு முன்பாக நிறைவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!