சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் பலி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் மண்ணில் புதைந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போதே குறித்த குழியில் மண் சரிந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த நபர் பிரவுன்ஸ்வீக் தோட்டத்தை சேர்ந்த ராமய்யா அமில சந்தருவான் வயது 29 என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.