வீசா முடிவுற்ற நிலையில் சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் எவ்வித கட்டணம் அல்லது தண்டப்பணத்தை செலுத்தாமல் நாட்டை விட்டு வௌியேற சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. கொவிட் 19 தொற்று காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வௌியேற முடியாமல் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற் கொண்டு சவுதி அரேபிய அரசு தற்காலிகமாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் உள்ள நல்லுறவின் காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.