ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
இந்தநிலையில் ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென அண்மையில் மரணமடைந்தார்.
அவர் மரணமடைவதற்கு முன் ஒரு முறையாவது ஓவியாவை பார்க்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்.ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் சான்வியின் பெற்றோர்களை தான் சந்திக்க விரும்புவதாகவும் அவர்களை தொடர்பு கொள்ள யாராவது உதவுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.